விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தை அழைப்புக்கு மறுப்பு., சங்க தலைவர்கள் கைது? திடுக்கிடும் தகவல்!!!

0

அண்மைக்காலமாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து எண்ணற்ற விவசாயிகள் “டெல்லி சலோ” போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், மீண்டும் போராட்டம் தீவிரமடைய தொடங்கியது. இதையடுத்து ரப்பர் குண்டுகளால் போலீசார் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலரும் படுகாயமடைந்தனர்.

இதனால் 2 நாள் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதை விவசாயிகள் நிராகரித்து விட்டனர். மேலும் ஹரியானா ஷம்பு எல்லையில் போராடி வரும் விவசாய சங்கத் தலைவர்களை, தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அம்பாலா போலீசார் கைது செய்துள்ளனர். இச்சட்டத்தின் கீழ் ஒருவரை எவ்வித காரணமும் இன்றி 12 மாதங்கள் வரை தடுத்து வைக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 1 தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இப்படித்தான் தயாராகணும்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here