டிராக்டர்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் – மாநிலத்தில் தொடரும் பதற்றம்!!

0
டிராக்டர்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் - மாநிலத்தில் தொடரும் பதற்றம்!!

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் அந்த பகுதியில் பெரும் அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம்:

கடந்த 2020ம் ஆண்டு, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுடில்லியின் எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஒரு வருடத்திற்கு மேல் நீடித்தது. இதை தொடர்ந்து விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்தாண்டு டிசம்பர் அறிவித்தது. இதையடுத்து விவசாயிகள் போராட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படும் வகையில் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர்களுடன் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு உள்ளனர். அதாவது, ஹரியானா மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல்லை, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து உள்ளது. ஆனால் பாரதிய கிசான் யூனியன், வெள்ளி கிழமைக்குள் கொள்முதல் செய்யாவிட்டால் நெடுஞ்சாலையை முற்றுகையிடுவோம் என முன்னதாக அறிவித்தது.

தமிழக பெண்களுக்கான ரூ.1000 உரிமைத் தொகை – இப்போதைக்கு No.,இது முடியட்டும் பாப்போம்! அமைச்சர் பகீர்!!

இந்த அறிவிப்பின் பேரில், இந்த போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை போலீசார் தடுப்பு அரண்களை அமைத்து தடுக்க முயன்றும், தடுப்புகளை தகர்த்து விவசாயிகள் முன்னேறி விட்டதாக தகவல்கள் கூறுகிறது. இந்த போராட்டத்தால், சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. மேலும் அம்மாநில அரசு விவசாயிகளுடன் 3 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், உரிய முடிவு எதுவும் எடுக்க வில்லை என்பதால் இந்த பதற்றமான சூழல் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here