Friday, April 19, 2024

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலையை போன்ற சம்பவம் – வனத்துறையினர் விசாரணையில் இறந்த விவசாயி??

Must Read

விசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி மரணம் அடைந்து உள்ளது, மக்கள் மத்தியில் மீண்டும் சாத்தான்குளம் விவகாரத்தை நினைவுபடுத்தியுள்ளது.

விசாரணைக்கு அழைப்பு:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிஞ்சியை சேர்ந்தவர், விவசாயி முத்து. இவர் தனது வீட்டின் அருகே மின்வேலி அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வன துறை அதிகாரிகள் இவரை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து சென்று உள்ளனர். இதனை அறிந்த இவரது மகன் நடராஜன் தனது உறவினர்களோடு வனத்துறை அலுவலகத்திற்கு சென்று உள்ளார்.

தொழிலாளர்களுக்கு 1 மாதத்திற்கான இ – பாஸ் – தமிழக அரசு முடிவு..!

farmer muthu died case
farmer muthu died case

சென்ற வழியில் வனத்துறை அதிகாரிகள் விவசாயி முத்துவுடன் ஜீப்பில் வந்து உள்ளனர். அருகில் சென்று நடராஜன் பார்த்தபோது, முத்து தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால், அவரது மகன் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளார், அப்போது விவசாயி முத்து இறந்து உள்ளார், என்பது அனைவர்க்கும் தெரிய வந்து உள்ளது.

மனித ஆணைய உத்தரவு:

இதனை தொடர்ந்து, விவசாயி முத்துவின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் வனத்துறையினர் விசாரணையின் பொது தாக்கியிருக்க கூடும், அதனால் தான் இறந்து உள்ளார், என்று போராட்டம் நடத்தினர்.

People protesting
People protesting

இந்த நிலையில், செய்திகளின் மூலம் தகவல் அறிந்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கை நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரித்தார். இந்த சம்பவம் குறித்து 4 வாரங்களில் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -