நீங்களும் ஒன்னு கூடிட்டீங்களா?? பாரதி கண்ணம்மாவில் வெண்பாவும், அஞ்சலியும் செஞ்ச காரியத்தை பாருங்க!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் வில்லிகளான வெண்பா மற்றும் அஞ்சலி இருவரும் ஒன்றாக சேர்ந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் பல தொடர்கள் ஒளிபரப்பப்பட்டாலும் மக்கள் அனைவரும் விரும்பி பார்ப்பது என்னமோ “பாரதி கண்ணம்மா’ சீரியலை தான். இந்த சீரியல் இன்று வரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் ஆகும். இந்த சீரியல் மிகவும் யதார்த்தமான கதைகளத்துடன் இருந்தது தான் இதற்கு காரணம். கூடுதலாக, இந்த சீரியலில் நடிக்கும் நாயகர்கள் அனைவரும் தங்களது இயல்பான நடிப்பின் காரணமாக மக்கள் மத்தியில் இந்த சீரியலிற்கு என்று தனி மதிப்பு உண்டு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தான் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இதில் கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் பிரிந்துள்ளனர். அதே போல் இவர்கள் இருவரையும் பிரிக்கும் வேலையினை வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பாரினா கச்சிதமாக செய்து வருகிறார். தனது வித விதமான வில்லத்தனமான வேலைகளால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அவர் வில்லி என்ற கதாபாத்திரத்தினை இன்று வரை நேர்த்தியாக செய்து வருகிறார். இப்பொது இவர் வில்லியாக இருந்தாலும் இந்த சீரியலில் ஆரம்பத்தில் வில்லியாக இருந்தவர் அந்த சீரியலில் கண்ணம்மாவின் சகோதரியாக வரும் அஞ்சலி தான்.

‘லெஜெண்ட்’ சரவணா படத்தில் இதுக்கு தான் நடிக்க வந்தேன் – நடிகை ஊர்வசி ஓபன் டாக்!!

தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இரு வில்லிகளும் ஒன்றாக இணைந்து இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த ரீல்ஸ் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது. இருவரும் ஹிந்தி பாடலான “போலே சுடியான்” என்ற பாடலிற்கு நடனமாடியுள்ளனர். வில்லிகளாக இருந்தாலும் இருவரும் அந்த வீடியோவில் கொள்ளை அழகுடன் உள்ளனர்.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here