முதன்முதலாக தன் கணவருடன் இணைந்து கர்ப்பகால போட்டோஷூட் செய்த பாரதி கண்ணம்மா பரீனா – அவரே வெளியிட்ட பதிவு!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா அசாத் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் முதன்முதலாக தன் கணவருடன் இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

பரீனா அசாத்

தொகுப்பாளினியாக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் தான் பரீனா அசாத். அழகான, குழந்தை தனமான பேச்சால் இவருக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். சன் டிவியில் வணக்கம் தமிழகம் என்றாலே நியாபகத்திற்கு வருவது பரீனா தான்.

மேலும் சன் டிவியில் இருக்கும்போதே அவர் திருமணமும் செய்து கொண்டார். அதன் பிறகு தான் அவருக்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்தது. வில்லி கதாபாத்திரம் அவருக்கு பக்காவாக ஒத்துப்போனது. ஆரம்பத்தில் சாதா வில்லி என்று அவரை எடை போட்டவர்களுக்கு பெரிய ஷாக் தான் அவரின் செய்கைகள்.

படத்தில் கூட இந்த அளவிற்கு யாராலும் யோசித்திருக்க முடியாது. இதன் மூலமே அவர் சரியான இடத்தை பிடித்து விட்டார். மேலும் சிறந்த வில்லிகள் விருதையும் இவர் தான் தட்டி சென்றார். அது தனது 8 வருட போராட்டத்திற்கு கிடைத்த பலன் என்றும் சொல்லி இருந்தார் பரீனா.

தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பல போட்டோஷூட்களை நடத்தி வந்தார். இதற்கு பலரும் திட்டியும் வந்தனர். இந்நிலையில் முதன்முதலாக தனது கணவருடன் இணைந்து போட்டோஷூட் செய்துள்ளார். இதனை அவரது பயோ ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். கூடிய விரைவில் புகைப்படத்தை வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here