சிவப்பு உடையில் பொம்மை போலவே கர்ப்பகால போட்டோஷூட் செய்த பரீனா – அசந்துபோன ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரீனா தற்போது மீண்டும் தனது போட்டோஷூட் அட்டகாசங்களை ஆரம்பித்து விட்டார். சிறப்பு நிற உடையில் பொம்மை போல இருக்கும் இவரின் போட்டோஷூட்டை பார்த்து பலரும் விரைந்துள்ளனர்.

பரீனா அசாத்

தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் தான் பரீனா அசாத். ஆரம்பத்தில் ஒரு சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வந்த அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தான் அவர் விஜய் டிவியில் கால் பதித்தார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வந்தவர்.

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தான் இவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. வில்லியாக களமிறங்கி சீரியலையே பரபரப்பாக கொண்டு சென்று வருகிறார். பரீனா எங்கு சென்றாலும் அவரை திட்ட ஆரம்பித்து விடுவார்களாம். அதுதானே அவருக்கு கிடைத்த பெருமையே.

இவர் கர்ப்பமாகி இருக்கும் செய்தியை கேட்டதும் ஒரு பக்கம் அனைவர்க்கும் சந்தோஷமாக இருந்தாலும் சீரியலை விட்டு விலகி விடுவாரோ என்ற பயம் அனைவருக்குமே இருந்தது. ஆனால் அந்த சீரியலில் முடிந்தவரை நடிப்பேன் என்று பரீனா வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஆனாலும் கர்ப்பமான நாளில் இருந்து பரீனா செய்யும் அலுப்பு கொஞ்சம் நஞ்சம் கிடையாது. போட்டோஷூட் ரீல்ஸ் என கலக்கி வருகிறார். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு போட்டோஷூட் செய்துள்ளார். அதில் சிவப்பு நிற உடையில் அவர் பொம்மை போல இருக்கும் போட்டோவை பார்த்து பலரும் மெய்சிலிர்த்து போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here