நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கு மத்திய, மாநில அரசு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்டங்களையும், உதவித் தொகைகளையும் மாதம் தோறும் அளித்து வருகிறது. இது தவிர ரயில் பயணங்களின் போது குறைந்த கட்டண சலுகையும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சலுகை கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் மிகவும் அவஸ்தை பட்டனர். இதை மீண்டும் கட்டண சலுகையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
ஓட்டுநர் இல்லாத கால் டாக்சி.., விரைவில் அறிமுகம்.., வெளியான சூப்பர் நியூஸ்!!!
இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்து பல அமைப்புகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அதாவது இனி வரும் நாட்களில் ரயில் பயணத்தின் போது மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படாது என திட்டவட்டமாக கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு மூத்த குடிமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.