அவர் கண்ட்ரோலையே இல்ல.., நாற்காலியில் தடுமாறிய கேப்டன் விஜயகாந்த்.., அதிர்ச்சியில் மக்கள்!!

0
அவர் கண்ட்ரோலையே இல்ல.., நாற்காலியில் தடுமாறிய கேப்டன் விஜயகாந்த்.., அதிர்ச்சியில் மக்கள்!!
அவர் கண்ட்ரோலையே இல்ல.., நாற்காலியில் தடுமாறிய கேப்டன் விஜயகாந்த்.., அதிர்ச்சியில் மக்கள்!!

நடிகர் விஜயகாந்த் தனது கட்சி ஆபீஸில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்த போது அவர் தடுமாறியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜயகாந்த்:

தமிழ் திரையுலகில் 30 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகராக இருந்து ஜொலித்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் கிட்டத்தட்ட 155 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவரின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அப்படத்தில் இருந்து அவரை கேப்டன் விஜயகாந்த் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். அதன் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு அரசியலில் குதித்து ஒரு அரசியல் சாணக்கியராக விளங்கி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் சில ஆண்டுகளாக கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறைபாடு காரணமாக உடல் மெலிந்து தோற்றம் அளித்து வருகிறார். அவரின் கர்ஜிக்கும் முகத்தை இப்பொழுது பார்க்கும் போது அடையாளம் தெரியாத நபர் போல் இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தனது கட்சி ஆபீஸில் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது குடும்பத்தினர் உதவியால் நகரும் நாற்காலியில் அமர்ந்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுடன் பேசி உள்ளார்.

நானியுடன் கைகோர்க்கும் மிருணாள் தாகூர் .., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

அந்த வேலையில் அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்ட போது அவர் நிதானத்தில் இல்லாமல் சற்று சாய்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவரின் உடம்பு அவர் கண்ட்ரோலில் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் தனது ரசிகர்களை பார்த்தாக வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here