சஞ்சுவுக்காக BCCI-ஐ கதிகலங்க வைத்த ரசிகர்கள்.., கடைசில நடந்தது இதுதான்!!

0
சஞ்சுவுக்காக BCCI-ஐ கதிகலங்க வைத்த ரசிகர்கள்.., கடைசில நடந்தது இதுதான்!!

சஞ்சு சாம்சனுக்காக ரசிகர்கள் கொடுத்த ஆதரவால், BCCI வேறு வழியின்றி இந்திய அணிக்கு அவரை கேப்டனாக நியமித்தனர்.

ரசிகர்களின் பவர் இதுதானோ

T20 WC தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறவில்லை. இவர் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் எதிரணியின் பவுலர்களை அசால்ட்டாக எதிர்கொள்வார். ஆனாலும் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிக்கு இடையிலான T20 தொடர் திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்தது. இந்த போட்டியின் போது மைதானத்தில் சஞ்சுவின் ரசிகர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் BCCI செய்வதறியாமல் குழப்பத்தில் திகைத்தனர். மேலும் இந்த போராட்டம் நடந்தால் கண்டிப்பாக T20 தொடர் தடைபடும். இந்த நிலையை சமாளிக்க BCCI நியூசிலாந்து A அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சஞ்சு சாம்சனை இந்திய அணிக்கு கேப்டனாக நியமித்தனர். BCCI இவருக்கு கேப்டன் பதவி வழங்கியதை தொடர்ந்து இந்த போராட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here