பிரபல சினிமா தயாரிப்பாளர் ராமராவ் கொரோனாவால் உயிரிழப்பு!!

0

பிரபல தெலுங்கு சினிமாவின் தயாரிப்பளரும்,வினியோகஸ்தருமான மற்றும் ‘ஈதாரம் புரொடக்ஷன்ஸ்’ நடத்தி வரும் போகுரி பாபு ராவின் சகோதரர் ஆன டோபோகுரி ராமராவ் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துவிட்டார் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா தயாரிப்பாளர்:

ராம ராவ் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸுக்கு பரிசோதனை செய்திருந்தார். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஹைதராபாத்தின் கான்டினென்டல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது நிலைமை மோசமடைந்து, இன்று காலை 9 மணிக்கு ராமராவ்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று அச்சம் – 2.89 லட்ச ரூபாய் தங்க முகக்கவசத்துடன் வலம்வரும் நபர்..!

பாபு ராவ் தயாரித்த படங்களை ராமராவ் வெளியிட்டிருந்தார். கொரோனா வைரஸால் இறந்த முதல் குறிப்பிடத்தக்க டோலிவுட் சினிமாத்துறையை சேர்ந்தவர் ராம ராவ். அவருக்கு 64 வயது, அவருக்கு ஏதேனும் பக்க நோய்கள் இருந்ததா இல்லையா என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here