சூப்பர் ஸ்டார் படத்தின் இயக்குனர் திடீர் மறைவு – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இன்று மறைவு :

தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பி. சந்திரசேகர் ரெட்டி. இவர் டோலிவுட் உலகில் 96 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தார். முன்னணி நடிகர்களான ஜூனியர் என் டி ஆர், ஏ என் ஆர், சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா உள்ளிட்ட பலரது படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்களில் பலே அல்லுடு, கொடுக்குழு,படி பந்துலு, விசித்ரா தாம்பத்யம், நவோதயம், பங்காரு கோபுரம், அண்ணா செல்லு உள்ளிட்ட பல படங்கள்   இன்றும் அவரது பெருமையை பறைசாற்றி வருகிறது.

 

இத்தகு புகழின் உச்சியில் இருந்த இயக்குனர் சந்திரசேகர் தனது 90 வயதில் இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக உயிரிழந்த இயக்குனர் மறைவுக்கு டோலிவுட் உலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோல அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலரும், சமூக வலைதளங்கள் வாயிலாக அந்த இயக்குனருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here