அடுத்தடுத்து வெற்றி படிகளில் முன்னேறும் அனிதா சம்பத் – புதிய செயலால் குவியும் பாராட்டுக்கள்!!

0

ஒரு காலத்தில் செய்தி வாசிப்பாளர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அனிதா சம்பத் தான். ஒரு காலத்தில் என்றவுடன் மிகவும் பழங்காலத்துக்கு செல்லவேண்டாம், 90 ஸ் கிட்டான அவரை 2k கிட்டுகளுக்கு ரொம்ப புடிக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு பெயரும், புகழையும் அனிதா சம்பத்துக்கு செய்தி வாசிப்பாளர் தொழில் பெற்றுக்கொடுத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவரது தமிழ் உச்சரிப்பும், பேசும் அழகும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதனால் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத்துக்கு அதிகளவு ரசிகர்களும் குவிந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்த அனிதா சம்பத் பிரபல எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் ஒரே மகள். இவர் தன்னுடன் பணியாற்றிய பிரபாகர் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனிதா மக்களின் ஆதரவை சம்பாதித்தார். இது பத்தாதுன்னு பிக்பாஸ் அல்ட்டிமேட் ஷோவிலும் கலந்து கொண்டு பிரபலமானார். அண்மையில் புதிய வீடு வாங்கியிருப்பதாக கூறி அவரது யூட்யூப் சேனலில் வீட்டை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இப்படி பிரபலத்துக்கும், செல்வத்துக்கும் குறைவில்லாத அனிதா அவரது கணவருடன் முதன்முறையாக வெளிநாட்டு பயணமாக மலேசியா சென்றுள்ளனர். அங்கு இருவரும் எடுத்து கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here