முன்னணி இசையமைப்பாளருக்கு கூகுள் கொடுத்த அங்கீகாரம் – அவரது பிறந்தநாளில் கிடைத்த கெளரவம்!!

0
முன்னணி இசையமைப்பாளருக்கு கூகுள் கொடுத்த அங்கீகாரம் - அவரது பிறந்தநாளில் கிடைத்த கெளரவம்!!

நாட்டின் முன்னணி இசையமைப்பாளரான, பூபேன் ஹஸாரிக்காவின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரபல தேடல் நிறுவனமான கூகுள் அவருக்கான சிறப்பு டூடூலை வெளியிட்டுள்ளது.

சிறப்பு டூடுல்:

அசாம் மாநிலத்தில் 1926 ஆம் ஆண்டு பிறந்த, பிரபல பின்னணி பாடகர் பூபேன் ஹஸாரிக்கா, தனது 10 வயதில் இசை துறைக்கு வந்தார். ஜோய் மோதி என்ற திரைப்படத்திற்கு முதல் முறையாக பாடிய இவர், இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில், பாடல்களுக்கு  இசை அமைத்துள்ளார். பாடகர் மட்டுமல்லாது இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்ட இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே உள்ளிட்ட பல தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த 2019 நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவையும் வென்றுள்ளார். இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு, தன்னுடைய 85 வயதில் உயிரிழந்தார். இவரது  96-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த சாதனை மனிதரின், பெருமைக்கு அங்கீகாரம் சேர்க்கும் வகையில் உலகின் தேடல் நிறுவனமான கூகுள் இவருக்கான சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு கவன ஈர்ப்பு டூடுல், சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here