சாலை விபத்தில் சிக்கிய பிரபலம் – நடு ரோட்டிலேயே பிரிந்த உயிர்! ரசிகர்கள் கண்ணீர்!!

0
சாலை விபத்தில் சிக்கிய பிரபலம் - நடு ரோட்டிலேயே பிரிந்த உயிர்! ரசிகர்கள் கண்ணீர்!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பஞ்சாப் பாடகர் நிர்வைர் சிங், கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி:

பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர்  நிர்வைர் சிங், மை  டர்ன் என்ற ஆல்பத்தில் இடம்பெற்ற   ‘தேரே பினா’ என்கிற பாடல் மூலம் புகழ் பெற்றவராக விளங்கினார். இது மட்டும் இல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு  ஹிக் தோக் கே என்ற டூயட் ஹிட் பாடலை பாடி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பிறப்பில் ஒரு, ஒரு பஞ்சாபி பாடகராக இருந்தாலும்  கடந்த 9 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தங்கி வசித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், இவர் நேற்று மதியம் 3:30 மணியளவில் டிகர்ஸ் ரெஸ்டில் உள்ள ஃபுல்லா டிக்கர்ஸ் ரோட்டில்  தனது காரை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே வந்த ஜீப் மீது மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய பாடகர் நிர்வைர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மறைவுக்கு, பஞ்சாபி திரை கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளனர். பிரபல பாடகரின் இந்த அதிர்ச்சி மறைவு இந்திய இசைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here