பிரபல முன்னணி பாடகி அதிர்ச்சி மரணம் – 46 வயதில் உயிரிழந்த சோகம்! திரையுலகினர் இசை அஞ்சலி!!

0
பிரபல முன்னணி பாடகி அதிர்ச்சி மரணம் - 46 வயதில் உயிரிழந்த சோகம்! திரையுலகினர் இசை அஞ்சலி!!
பிரபல முன்னணி பாடகி அதிர்ச்சி மரணம் - 46 வயதில் உயிரிழந்த சோகம்! திரையுலகினர் இசை அஞ்சலி!!

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி சங்கீதா சுஜித், சிறுநீரக கோளாறு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் மரணம் :

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட  பாடல்களைப் பாடியுள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், இசையமைத்த மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில், “தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை” என்ற சூப்பர் ஹிட் பாடலை இவர் பாடியுள்ளார்.

கடைசியாக, மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடித்த அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் அவர் பாடிய பாடல்தான், கடைசிப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனில்லாமல், 46 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு, திரைப் பிரபலங்கள் பலரும் இசை அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here