78 வயதில் மாரடைப்பால் மறைந்த பின்னணி பாடகர் – மைக்கை பிடித்த படியே உயிரிழந்த சோகம்!!

0
முக்கிய பிரபலத்தின் வீட்டில் நடந்த மரணம் - ஆறுதல் சொன்ன ரசிகர்கள்! வைரலாகும் கண்ணீர் பதிவு!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர், தனது 78 வயதில் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் சோகம்:

மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர். 78 வயதான இவர், மலையாள திரையுலகில் பல பாடல்களைப் பாடியுள்ளார். கேரள மாநிலத்தின் ஆலப்புழையில் உள்ள பத்திர பள்ளி என்ற இடத்தில், ப்ளு டைமண்ட் என்ற இசைக் குழுவின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற கச்சேரியில், இவர் பாடல் பாடிக்கொண்டிருந்தார்.

பிரபல பாடகர் இயேசுதாஸின் ஹிந்தி  பாடலை, உச்சபட்ச நிலையில் பாடிக் கொண்டிருந்த அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி சரிந்தார். அப்போது, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர், மேடையில் உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here