கொரோனா தொற்றுக்கு ஆளான பிரபல பின்னணி பாடகர் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

இந்தி சினிமாவில் பின்னணி பாடகராக உள்ள புகழ்பெற்ற பாடகர் சோனு நிகம் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

கொரோனா பாதிப்பு:

உலகம் முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மூன்றாம் அலை ஆரம்பித்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அண்மையில் எச்சரித்தனர். இந்நிலையில், பாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற பாடகராக உள்ள சோனு நிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கு, குஜராத்தி, மலையாளம் உள்ளிட்ட  மொழிகளில் பல பின்னணி பாடல்களை பாடி அசத்தியுள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான விருது பெற்றுள்ள இவர், மும்பையில் இருந்த படி தனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக ரசிகர்களிடம் பேசினார்.

தன்னோடு சேர்த்து, தனது மனைவி மதுரிமா நிகம் மற்றும் மகன் நேவான் நிகம் ஆகியோருக்கும் கொரோனா ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். இந்தியாவுக்கு வருவதற்கு முன், நான் பரிசோதனை செய்து கொண்டு, என்னை தனிமைப்படுத்தி கொண்டேன் என ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால், அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் தைரியம் கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here