தனியார் ஊழியர்களுக்கு ஷாக் – பிரபல நிறுவனம் திடீர் முடிவு! 10% நபர்கள் வேலை இழக்கும் அபாயம்!!

0
தனியார் ஊழியர்களுக்கு ஷாக் -  பிரபல நிறுவனம் திடீர் முடிவு! 10% நபர்கள் வேலை இழக்கும் அபாயம்!!

மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, தற்போது முன்னணி ஆடை நிறுவனமான டாமி ஹில்ஃபிகர் மற்றும் கால்வின் கிளீன் ஆகிய நிறுவனம் 10% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

வேலை இழக்கும் அபாயம்:

இந்தியாவில் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில், ஏகப்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சமீப தினங்களாக ஊதிய உயர்வு, புது ஆட்களை நியமித்தல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் செய்து வருகிறது. அதே வகையில், நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட அதிரடி செயல்களையும் செய்து வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த வகையில் மைக்ரோசாப்ட், நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் 1800 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. அதேபோல் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமும், அமெரிக்கா ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான போர்ட்-டும் ஊழியர் பணி நீக்கம் குறித்து அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி ஆடை நிறுவனமான PVH Corp ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, டாமி ஹில்ஃபிகர் மற்றும் கால்வின் கிளீன் உள்ளிட்ட நிறுவனங்கள் 10%ஊழியர்களை இந்த ஆண்டுக்குள் குறைக்க திட்டமிட்டுள்ளது. விற்பனை திறன் குறைந்ததாலும், சரக்குகள் அதிக அளவு கையிருப்பு இருப்பதாலும் இந்த கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனால், 1000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள்  வேலை இழக்கும்  அபாயம் உருவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here