அடக்கடவுளே.., பிரபல கவிஞர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!

0
அடக்கடவுளே.., பிரபல கவிஞர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!
அடக்கடவுளே.., பிரபல கவிஞர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!

நாகை மாவட்டத்தில் பிரபல கவிஞராக திகழ்ந்தவர் தான் வாய்மைநாதன். அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் மரபு கவிதையில் பல்வேறு படைப்புகளை எழுதி சாதனை படைத்தவர். குறிப்பாக இவர் எழுதிய நேதாஜி காவியம் கடந்த 1986ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காவியம் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதே போல் அவர் எழுதிய வெண்மணிக் காப்பியம், மதுரை வீரன் ( கவிதை நாடகம்), வ.உ.சி வரலாறு உள்ளிட்டவை மிகவும் பிரபலமானவை தான். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் வகித்து வந்த கவிஞர் வாய்மைநாதன் இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான வாய்மேடு கிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று அவருடைய இரு மகன்கள் தெரிவித்துள்ளனர்.

உச்சத்தில் இருந்து பொத்தென விழுந்த தக்காளி விலை.., ஒரு கிலோ வெறும் 44 ரூபாய் தான்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here