மேற்கு தொடர்ச்சி மலை, தேன் உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய ராசீ தங்கதுரை கடந்த சில நாட்களாக இருதய பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று திடீரென உயிரிழந்தார். இவரது இறப்பு சினிமா வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த இவர் சிறு வயதிலேயே கவிதை, கதை எழுதுவதில் நாட்டம் கொண்டுள்ளார்.
அதன்படி சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு கதைகளை எழுதியுள்ளார். மேலும் பல விருதுகளை வென்ற தேன் திரைப்படத்தில் இவர் வசனம் எழுதியது மட்டுமல்லாமல், சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறப்புக்குப் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.