பல படங்களில் நடித்த முன்னணி நடிகை திடீர் மறைவு – திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி!!

0
Condolences mourn RIP card concept. Remembrance day sign. Candle light flame with hand burning canldes.

மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிகவும் புகழ் பெற்றவராக விளங்கிய நடிகை கோழிக்கோடு சாரதா அம்மையார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

பிரபல நடிகை மறைவு:

மலையாள திரை உலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கோழிக்கோடு வெள்ளிபரம்பைச் சேர்ந்த சாரதா.  கடந்த 1979 ஆம் ஆண்டு வெளிவந்த அங்காக்குறி என்ற திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமாகி, பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழடைந்துள்ளார். சல்லாபம் என்ற படத்தில் அவரது கதாபாத்திரம் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அவருக்கு, உமாதா, சஜீவ், ரஜிதா, ஸ்ரீஜித் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

84 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு இருதயம் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த நிலையில், இவருக்கு தீவிர மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதை மருத்துவமனை நிர்வாகம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.  அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here