நட்சத்திர விடுதியில் வசமாய் சிக்கிய வாரிசு நடிகர் – படப்பிடிப்பின் போது நடந்த விபரீதம்!!

0

படப்பிடிப்பு பணிகளுக்காக கேரளா சென்ற நடிகர் ஜெயராம் அவர்களின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஓட்டல் கட்டணம் கட்டுவது தொடர்பான பிரச்சனையால் சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட பிரபலம்:

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயராம். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். இவர் மீன் குழம்பும் மண் பானையும்,ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ஒரு சில வெப் தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், படப்பிடிப்புக்காக கேரளா மூணாறுக்கு சென்ற படக்குழுவினருடன் காளிதாஸ் ஜெயராம் சென்றிருந்தார்.

அங்கு ஒரு உல்லாச விடுதியில் இவர்கள் தங்கியுள்ளனர். அதன் கட்டணத்தை, ஆன்லைனில் படக்குழுவினர் செலுத்தினர். ஆனால் அது ஹோட்டல் நிர்வாகத்திற்கு முறையாக வந்து சேரவில்லை. இதையடுத்து நடிகர் உள்ளிட்ட படக்குழுவினரை ஹோட்டல் நிர்வாகம் சிறை பிடித்தது. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, படக்குழுவினர் கட்டணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here