மாரடைப்பால் உயிரிழந்த பிரபல குணசித்திர நடிகர் – திகைப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்!!

0

இந்தி வெப் தொடரில் நடித்து மிகவும் புகழ்பெற்ற நடிகர் பிரம்மா மிஷ்ரா. இவர் தனது  36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது இறந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகர் மறைவு:

பாலிவுட் திரை உலகத்தில்  பிரபல வெப் சீரிஸ் தொடரான Mirzapur இல் நடித்து புகழ் அடைந்தவர் நடிகர் பிரம்மா மிஸ்ரா. இவர் நடித்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இந்தப் படத்தில் இவர் லலித் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 36 வயதான இவர் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது இவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு,தனது பாத்ரூமில் இறந்து கிடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததாக, அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் வந்து அவரது பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனை அனுப்பினர். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல குணசித்திர நடிகரின் இந்த திடீர் மறைவு, ஒட்டுமொத்த திரை உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here