பிரபல இயக்குனர் மீது போலீசில் அதிரடி புகார் – பழங்குடியின மக்களை இழிவுபடுத்தியதாக வழக்கு!!

0
பிரபல நடிகர் அதிரடி கைது - ஹிஜாப் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய பதிவு!!
பிரபல இயக்குனர் மீது போலீசில் அதிரடி புகார் - பழங்குடியின மக்களை இழிவுபடுத்தியதாக வழக்கு!!

பாஜகவின், சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரௌபதி முர்மு குறித்து, பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்ச்சை கருத்து:

இந்தியாவின் குடியரசுத் தலைவராக உள்ள  ராம்நாத் கோவிந்த் பதவி காலம், நிறைவடைய உள்ளது. இதையடுத்து, ஜனாதிபதி பதவிக்கான பொது தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இவர், சமீப காலமாக அரசியல் கட்சிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

இந்த நிலையில் குடியசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி குறித்து, பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது அவர் திரௌபதி என்றால், பாண்டவர்கள் யார் என்றும், குறிப்பாக கௌரவர்கள் யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்தப் பதிவு, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவதாக உள்ளதாக கூறி, தெலுங்கானா பாஜக தலைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் ராம்கோபால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here