ஏன்டா எங்க கை வைக்குற.,ராஸ்கல்? அத்துமீறிய நபருக்கு பளார் விட்ட நடிகை – ப்ரோமோஷன் விழாவில் பகீர்!!

0
ஏன்டா எங்க கை வைக்குற.,ராஸ்கல்? அத்துமீறிய நபருக்கு பளார் விட்ட நடிகை - ப்ரோமோஷன் விழாவில் பகீர்!!

பட ப்ரோமோஷன் கூட்டத்தில் தன் மீது கையை வைத்து பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு பிரபல நடிகை பளார் விட்ட சம்பவம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாட்டர்டே நைட்:

மலையாள படமான ப்ரேமம் போன்று பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் நிவின் பாலி. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாட்டர்டே நைட். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இப்படம் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகிய இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். தற்போது, படத்தின் புரொமோஷன் வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த வகையில் கோழிக்கோட்டில் உள்ள பிரபல மால் ஒன்றில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் அவர்களை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் மாலுக்குள் திரண்டனர். அப்போது நெருங்கிய நிலையில் இருந்த ரசிகர்கள் நடிகைகள் கிரேஸ் ஆண்டனி மற்றும் சானியா ஐயப்பனின் மீது கையை வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

எம்மாடி அதிதி.., ஓவரா ஆட்டம் போடாதீங்க.., எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.., என்ன செஞ்சுருக்காங்கனு நீங்களே பாருங்க!!

இதனால் காண்டான நடிகை சானியா ஐயப்பன் தன் மீது கை வைத்த நபரை பளார் என்று அறைந்துள்ளார். தற்போது இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கோழிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here