சாக்குமூட்டையில்..பிணமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை – கணவரே கொலை செய்தது அம்பலம்!!

0

வங்காள தேசத்தைச் சேர்ந்த 45 வயது நடிகையான ரைமா இஸ்லாம் ஷாமு, சாக்குமூட்டையில் சடலமாக போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை இறப்பு:

வங்காள தேசத்தை சேர்ந்தவர் 45 வயது நடிகையான  ரைமா இஸ்லாம் ஷம்மு. பல மாதங்களுக்கு முன் இவர் காணாமல் போனதாக, அவரது உறவினர்கள் டாக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி 17 அன்று கெரனிகஞ்சில் உள்ள ஹஸ்ரத் பூர் பாலம் அருகே சாக்கு மூட்டைக்குள் இருந்தபடி இறந்த நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.  இதனை அடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவரது, கணவர் ஷகாவத் அலி நோபல் தன்னுடைய மனைவியை தானே கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதனை அடுத்து, இந்த கொலைக்கு கணவர் மட்டும் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்ப பகை காரணமாக கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல நடிகை சாக்குப்பையில் இருந்தபடி மீட்கப்பட்ட செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here