மறைந்த பிரபல இயக்குனருக்கு நடிகர் விஜய் சேதுபதி செய்த மரியாதை – இது என் வாழ்நாள் புண்ணியம் என நெகிழ்ச்சி!!

0

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்த எஸ்.பி.ஜனநாதன் மறைவை அடுத்து, அவரது முழு உருவ சிலையை நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிலை திறப்பு :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் பேராண்மை, இயற்கை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இறப்பதற்கு முன் கடைசியாக விஜய் சேதுபதியின் லாபம் படத்தை இயக்கி முடித்தார். இதனை அடுத்து, இந்த படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன், கடந்த மார்ச் 11ம் தேதி அவரது வீட்டிலேயே இறந்தார்.

அவரது மறைவை அடுத்து, தற்போது அவரின் முழு உருவ சிலையை நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்து, “சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி” என பெயரிடப்பட்ட அவரது நினைவு மலரையும் வெளியிட்டார். மேலும், இது குறித்து பேசும் போது, என் வாழ்வில் நான் செய்த மிக பெரிய புண்ணியம் இறந்த இயக்குனரின் கடைசி படத்தை தயாரித்து நடித்தது தான் என பெருமிதம் தெரிவித்தார். மேலும், கம்யூனிசம் மற்றும் பெரியாரின் கொள்கைகளை யார் வேண்டுமானாலும், படிக்கலாம் எனவும் அதை பின்பற்றி வாழும் போது தான் அதன் மீது ஒரு பற்றுதல் ஏற்படும் என பேசியுள்ளார் விஜய் சேதுபதி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here