வேற லெவல் தான்.. முக்கிய இயக்குனரின் பாராட்டை அள்ளிய திருச்சிற்றம்பலம் – என்ன சொல்லிருக்கார் பாருங்க!

0
வேற லெவல் தான்.. முக்கிய இயக்குனரின் பாராட்டை அள்ளிய திருச்சிற்றம்பலம் - என்ன சொல்லிருக்கார் பாருங்க!

தனுஷ் நடித்து அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்து பிரபல இயக்குனர் பாராட்டி தள்ளியுள்ளார்.

திருச்சிற்றம்பலம்:

கோலிவுட் வட்டாரங்களில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். அதன் வரிசையில் யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் போன்ற பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்த இரண்டு படத்தையும் இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கி மூன்றாவது முறையாக தனுசுடன் கை கோர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன போதிலும் படத்தின் வசூல் 110 கோடி வசூலை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டி பிரபல இயக்குனர் பேசியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான சங்கர் இந்த படத்தை பாராட்டி புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, திருச்சிற்றம்பலம் ஒரு அழகான காவியம். காதல், நட்பு மற்றும் சாதாரண குடும்பத்தில் இருக்கும் சூழ்நிலை என கதைக்களம் நன்றாக அமைந்துள்ளது. மேலும் நித்யா மேனன் எதார்த்தமான நடிப்பு இந்த படத்தில் முக்கிய அங்கமாக அமைந்திருக்கிறது. அவருடைய கதாபாத்திரம் இதயங்களைக் கொள்ளை கொள்கிறது. மித்ரன் ஜவஹர் அழகாக எழுதி இயக்கியுள்ளார். அது மட்டுமின்றி படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் என்று பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here