பிரபல தனுஷ் பட நடிகரின் தாயார் அதிர்ச்சி மறைவு – சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!!

0
பிரபல தனுஷ் பட நடிகரின் தாயார் அதிர்ச்சி மறைவு - சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!!

கோலிவுட் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குனர் அமீர், அவர்களின் தாயார் பாத்துமுத்து பீவி வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால்  அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென காலமாகியுள்ளார்.

அமீர் தாய் மரணம்:

கோலிவுட் சினிமாவில் இயக்குனர் பாலாவின் உதவி, இயக்குனராக தனது பணியை தொடங்கியவர் அமீர். தொடர்ந்து, கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தை இயக்கி, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். தொடர்ந்து மௌனம் பேசியதே, ராம், யோகி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர், சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

தனுஷ் உடன் இணைந்து வடசென்னை, மாறன் உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அமீர் அவர்களின் தாயார் பாத்துமுத்து பீவி, வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தாயாரின் இந்த மறைவால், இயக்குனர் அமீர் ஆழ்ந்த சோகத்தில் உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here