எனக்கு ஒன்னும் ஆகல.., ஆரோக்கியமாக தான் இருக்கிறேன்.., வேதனையுடன் நடிகை லட்சுமி!!

0
எனக்கு ஒன்னும் ஆகல.., ஆரோக்கியமாக தான் இருக்கிறேன்.., வேதனையுடன் நடிகை லட்சுமி!!
எனக்கு ஒன்னும் ஆகல.., ஆரோக்கியமாக தான் இருக்கிறேன்.., வேதனையுடன் நடிகை லட்சுமி!!

பழம்பெரும் நடிகை லட்சுமி இறந்து விட்டதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வலம் வந்த நிலையில், தற்போது இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

நடிகை லட்சுமி:

சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் பழம்பெரும் நடிகை லட்சுமி. இதனை தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இறந்துவிட்டதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவி வந்தது. இந்த செய்தியை நம்பி பலரும் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

போனை எடுத்த லட்சுமி நான் நன்றாக தான் இருக்கிறேன். சொல்ல போனால் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். யார் இந்த கீழ்த்தரமான வேலையை செய்தார் என தெரியவில்லை என்று கூறினார். மேலும் நான் இறந்து விட்டதாக நம்பி என்னை தொடர்பு கொண்ட அனைவரும் என் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளார்கள் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஐயோ.., நான் ஏமாந்துட்டேனே.., ஜீவா-காவியா காதல் விவகாரம் தெரிந்து கதறும் பிரியா.., ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!

மேலும் புதுவை மாவட்டத்தில் இருந்த லட்சுமி என்கிற யானை இறந்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. லட்சுமி என்கிற யானை இறந்ததை நடிகை லட்சுமி இறந்து விட்டார் என்று மாற்றி தகவல்களை நெட்டிசன்கள் பரப்பியுள்ளனர். மேலும் வருகிற டிசம்பர் 13 வந்தால் நடிகை லட்சுமிக்கு 70 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் இந்த தகவல் அனைவரையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here