மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் ஹரிஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர் – அப்டேட் கேட்டு குஷியான ரசிகர்கள்!!

0

ஓ மணப் பெண்ணே என்ற படத்தில் இணைந்து நடித்த  ஹரிஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர் அடுத்த படத்திலும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் காம்போ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.  இவர் தாராள பிரபு, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆக மாறினார். இதனை அடுத்து அவர் தற்போது, நடிகை பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து ஓ மணப் பெண்ணே என்ற படத்தில் நடித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.   தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த ஜோடி, இயக்குனர் சுந்தர் கார்த்திக் இயக்கத்தில் அடுத்த படத்தில் மீண்டும் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here