முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரபல நடிகர் – கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!!

0

தேனியில் உள்ள முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் பிருத்விராஜ்க்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனம் வலுத்து வருகிறது.

வலுக்கும் எதிர்ப்பு:

தமிழில் சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழடைந்தவர் நடிகர் பிருத்விராஜ்.  கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழடைந்திருப்பது குறிப்பிடத் தகுந்தது. அந்த வகையில், இவர் தற்போது முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அதாவது, 125 ஆண்டுகள் பழமையான இந்த அணை ஒரு நிரந்தர கட்டமைப்பாக இருப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை அதாவது, இந்த அணை உறுதியாக இருப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ள நிலையில், அவரின் இந்த கருத்து கண்டனத்துக்கு உரியதாக ஆக்கப்பட்டுள்ளது. இவரை, இனி தமிழ் படங்களில் நடிக்க வைக்க கூடாது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here