பாகுபலி பிரபாஸ் பட நடிகர் திடீர் மறைவு  – தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த படியே உயிரிழந்த சோகம்!!

0
மீனாவின் கணவரை தொடர்ந்து நுரையீரல் தொற்றால் இறந்த திரை பிரபலம் - ரசிகர்கள் கண்ணீர்!!
பாகுபலி பிரபாஸ் பட நடிகர் அதிர்ச்சி மறைவு  - தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த படியே உயிரிழந்த சோகம்!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி பிரபலமாக திகழ்ந்து வந்த, கிருஷ்ணம் ராஜு உடல் நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் இருந்தபடியே உயிரிழந்துள்ளார்.

 பிரபலம் மறைவு:

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், பிரபல அரசியல்வாதியுமான கிருஷ்ணம் ராஜு “ரிபல் ஸ்டார்” என்று அழைக்கப்பட்டு வந்தார். மாநில அரசின் பல்வேறு விருதுகளை பெற்ற இவர்,  பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படத்தில்  முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு திரைத்துறையில் நடிக்கவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தீவிர அரசியலில் இருந்து வரும் இவர், கடந்த 1988 ம் ஆண்டு காங்கிரஸ் சார்பாக காக்கிநாடா என்ற தொகுதியில் போட்டியிட்டு 1.65 லட்சம் வாக்குகள் அதிகம் என்று எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சிகிச்சையில் இருந்த இவர், நேற்று திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் தனது 83 வயதில் அதிகாலை 3:25 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here