டெல்லியில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவர் – இரண்டு பேர் அதிரடி கைது!!

0

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை தடுக்க அதிகாரிகள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போலி ரெம்டெசிவர் விற்பனை நடந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

போலி ரெம்டெசிவர்:

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு அனைத்து மாநிலத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தகுதி உடையவர்கள் அனைவரும் தானாக முன்வந்து கொரோனாவிற்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் சில சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அது என்னவென்றால் நாட்டில் தற்போது கொரோனாவிற்கு பயன்படுத்தும் மருந்துகள் அனைத்தும் கள்ளத்தனமாகவும் போலியாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கள்ள சந்தையில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி விற்கப்பட்ட செய்தி அனைவரையும் உலுக்கியது. தற்போது அதேபோல் மேலும் ஓர் சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு அம்சங்கள் – முழு விவரம் இதோ!!

அதன்படி டெல்லியில் மர்ம நபர்கள் போலியான ரெம்டெசிவர் ஊசிகளை விற்று வந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போலியான ரெம்டெசிவரை விற்ற இருவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 15 ஊசிகள் மற்றும் ரூ.34,000 பணம், ஒரு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி மற்றும் ஒரு காரை கைப்பற்றியுள்ளனர். தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here