உதயநிதிக்காக வாரிசு நடிகரின் கதையை ஓரம் கட்டிய கர்ணன் பட இயக்குனர் – விவரங்கள் உள்ளே!!

0

நடிகர் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் இந்தியாவின் முன்னணி நடிகராக முக்கிய அடையாளம் பெற்றிருக்கும் ஃபகத் பாசில் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது.

முக்கிய கூட்டணி:

நடிகர் உதயநிதி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் இயக்குனர் மாரி செல்வராஜ் இடம் ஒரு சிறந்த படத்தை எடுத்து தர சொல்லி பேசியிருக்கிறார்.  அதற்கு அவரும் ஓப்பு கொள்ளவே இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.  கர்ணன் படத்தை அடுத்து, பா.ரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரமை வைத்து கபடி கதையொன்றை இயக்க தயாராகிக் கொண்டிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

ஆனால், உதயநிதியின் பேச்சை அடுத்து, அதை மாற்றி கொண்டு இப்போது இந்த கதையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.  இவர்கள் கூட்டணியில் தற்போது புகழ்பெற்ற நடிகரான பகத் பாசிலும் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளதால் இந்த புது காம்போவை திரையில் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here