பளபளப்பான முகத்தை பெற “4 ஸ்டெப்ல இயற்கை பேஷியல்” – வீட்லேயே செஞ்சு பாருங்க!!

0

பெண்களில் பலர் தங்கள் முகத்தை சரியா பராமரிக்காம இருப்பாங்க. காரணம் என்னனு கேட்டிங்கன்னா ஒன்னு நேரம் இல்லைனு சொல்லுவாங்க இல்ல பணம் இல்லனு சொல்லுவாங்க. இந்த ரெண்டு பிரச்சனைக்கும் பொதுவா ஒரே தீர்வை தாங்க இந்த பதிவில் பாக்கப் போறோம்.

நாளை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழியும்!!

நம்ம வீட்ல இருக்குற பொருட்களை வைத்தே நம்ம முகத்தை அழகா பராமரிக்கலாங்க. 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை பேஷியல் செய்வது நம்ம சருமத்திற்கு அவசியம். அப்போது தான் நமது சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும். மேலும் முகத்தின்தோலில் இருக்கும் அழுக்குகள் நீங்கும். இந்த பேஷியல வீட்லயே செஞ்சு உங்க சருமத்தை பொலிவாக்குங்க. அழகு நிலையம் போகாமலேயே உங்க அழகை வீட்லயே சுலபமான முறைல அதிகமாக்குங்க.

step 1: கிளீனிங்

பேஷியல் பண்ணுவதற்கு முன்னாள் எப்போதுமே நமது முகத்தை சோப்பு அல்லது பேஷ்வாஷ் வைத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு, ஒரு கிண்ணத்தில் சிறிது காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சிறிய பஞ்சை பாலில் நனைத்து முகம் முழுவதும் தேய்த்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, சுத்தமாகி விடும்.

step 2: Scrubbing

scrubbing செய்வதற்கு முன்பு முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். ஸ்க்ரப்பிங் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிது கேரட் சாறை சேர்த்து முகத்தில் லேசாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

step 3: கிரீம் மசாஜ்

ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் பாதம் பவுடர், 2 டேபிள் ஸ்பூன் கேரட் சாறு ஆகியவற்றை சேர்த்து முகத்தில் 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இதனால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும். பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

step 4: Facepack

இப்பொழுது ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானிமெட்டி, 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடர், 2 டேபிள் ஸ்பூன் கேரட் சாறு இவற்றை சேர்த்து முகம் முழுவதும் பேக் போடா வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

அவ்ளோ தாங்க நம்ம பேஷியல் முடிஞ்சது. எந்த பக்க விளைவுகளும் இல்லாத நம்ம முகத்தை பொலிவாக்கக் கூடிய பேஷியல வீட்லயே செய்யுறது இவ்ளோ ஈஸி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here