கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்த இருவர் அண்மையில் நிபா வைரஸ் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த ஊரில் கேரள அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், வியர்வை, உமிழ்நீரில் இருந்து மற்றவர்களுக்கு பரவுவதாக மருத்துவ குழு கண்டுபிடித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட முகக்கவசம், அடிக்கடி கை கால் முகத்தை கழுவி கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கைகளை இப்போதும் கடைபிடிக்கும் படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் ராஜீவ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.