வாட்ஸ் அப்பை தொடர்ந்து பேஸ்புக்கிலும் மோசடி., விவரங்கள் லீக்! மெட்டாவுக்கு 276 மில்லியன் அபராதம்!!

0
வாட்ஸ் அப்பை தொடர்ந்து பேஸ்புக்கிலும் மோசடி., விவரங்கள் லீக்! மெட்டாவுக்கு 276 மில்லியன் அபராதம்!!
வாட்ஸ் அப்பை தொடர்ந்து பேஸ்புக்கிலும் மோசடி., விவரங்கள் லீக்! மெட்டாவுக்கு 276 மில்லியன் அபராதம்!!

வாட்ஸ் அப்பை தொடர்ந்து, உலகெங்கும் உள்ள 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தரவுகள் கசிந்ததால் மெட்டா நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பு :

உலகெங்கும் உள்ள அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை மிக முக்கியமானவை. இந்த நிலையில் இந்தியா உட்பட 150 மேற்பட்ட நாடுகளில், whatsapp பயன்படுத்தும் பல லட்சம் பயனர்களின் தரவுகள் ஹேக்கர்களால் இணையத்தில் திருடி விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது வாட்ஸ் அப்பை போல பேஸ்புக்கிலும், இந்த மோசடி நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தரவு இணையத்தில் கசிந்ததால், அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம், மெட்டா நிர்வாகத்துக்கு 276 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது. இது மட்டும் இல்லாமல் அதற்கான காரணம் குறித்து, விசாரிக்க குழு ஒன்றையும் அமைத்தது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(29.11.2022) – முழு விவரம் உள்ளே!!

இந்த மோசடியின், தடயம் மறைவதற்குள் இந்த ஆண்டும் கிட்டத்தட்ட, லட்சக்கணக்கான பயனர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் 700 மில்லியன் டாலர் மெட்டாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என, ஆணையம் மெட்டா நிர்வாகத்தை அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here