வாட்ஸ் அப்பில் புதிதாக வரவுள்ள கலக்கல் அம்சம்… நீங்களே என்னனு பாருங்க!!!

0

வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தபட்டபின் உரையாடல்கள் அனைத்தும் விரல் நுனியில் சுருங்கிவிட்டது என்றே சொல்லலாம். வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து அதன் பயனர்களுக்காக பல புதிய அம்சங்களை வாட்ஸ் அப் செயலியில் புகுத்திவருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக வரப்போகும் அப்டேட்டுகள் பற்றி மார்க் ஜூக்கர்பர்க் அவரது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

பேஸ்புக்கில் Facebook Shop என்ற அம்சம் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். பேஸ்புக் பயனர்கள் தங்களிடம் உள்ள பொருட்களை எளிதாக விற்க அல்லது வேறு பொருட்களை எளிதாக வாங்க இந்த Facebook Shop என்ற அம்சம் பயன்படுகிறது. இதனால் இது பேஸ்புக் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த Facebook Shop அம்சம் வாட்ஸ் அப்பிலும் வரவிருக்கிறது.இதை பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்  Facebook Shop அம்சம், பேஸ்புக் மார்க்கெட்பிளேஸிலும் புகுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தவிர புகைப்படங்கள் மூலம் பயனர்கள் பொருட்களை கண்டறிய இன்ஸ்டாகிராமில் Visual Search என்ற அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here