முகத்தை கண்ணாடி போல பளபளன்னு ஆக்கணுமா?? ஈஸி டிப்ஸ் இதோ!!

0

மாறி வரும் இயற்கை சூழலில் சருமத்தை பாதுகாக்க வேண்டிய கவலை எல்லாருக்குள்ளும் ஏற்படுவது பொதுவானது. இந்த சரும பிரச்சனைகளை நாம் வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே எளிதாக சரி செய்யலாம்.

முக பொலிவு

பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி சருமத்தில் பொதுவாக ஏற்படுகிற ஒரே பிரச்சனை முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள். உடல் வெப்பத்தினாலோ, பொடுகு அதிகமாவதினாலோ முகத்தில் பருக்கள் உருவாகிறது. இவற்றை சரி செய்வதற்கு முதலில் உடல் வெப்பத்தை தடுக்க வேண்டும். அந்த வகையில் வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே எப்படி முகப்பருக்களை எளிதாக சமாளிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுவோம். பப்பாளி பழத்தை அரைத்து அந்த பேஸ்ட்டை தினமும் முகத்தில் அப்ளை செய்வதால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைவதற்கு வாய்ப்புள்ளது. தக்காளி சாரும் முகத்திலுள்ள கருப்புள்ளிகளை நீக்கி பொலிவை தரக்கூடியது.

ஐடி ரைடுக்கெல்லாம் பயப்படுற ஆளா நானு?? கோவையில் கெத்து காட்டிய கமல்ஹாசன்!!

இவை எல்லாவற்றிலும் சிறந்த மற்றும் எளிய முறையாக உள்ளது வேப்பிலை மற்றும் கற்றாழை. இந்த பொருட்கள் மிக எளிதாகவே எல்லாருக்கும் கிடைக்க கூடியது. மற்றும் அதிவேக பலனை தரக்கூடியது. வேப்பிலையுடன் கற்றாழை ஜெல் சேர்த்து அரைத்து அதை தினமும் முகத்தில் தேய்த்து வந்தால் பருக்கள் குறைவதோடு கரும்புள்ளிகள் சீக்கிரமாக மறையக்கூடும். இந்த ஜெல்லை தலையில் தேய்த்து குளிப்பதால் தலையிலுள்ள பொடுகு குறைவதற்கும் வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here