பார்முக்கு திரும்பிய மான்செஸ்டர் யுனைடெட் அணி…, FA CUP-யில் காலிறுதிக்கு முன்னேற்றம்!!

0
பார்முக்கு திரும்பிய மான்செஸ்டர் யுனைடெட் அணி..., FA CUP-யில் காலிறுதிக்கு முன்னேற்றம்!!
பார்முக்கு திரும்பிய மான்செஸ்டர் யுனைடெட் அணி..., FA CUP-யில் காலிறுதிக்கு முன்னேற்றம்!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் FA CUP தொடரில், மான்செஸ்டர் யுனைடெட் அணியானது வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

FA CUP:

இங்கிலாந்தில் பிரபலமான கால்பந்து கிளப்களுக்கு இடையே FA CUP என்ற பெயரில், கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரானது, தற்போது காலிறுதி சுற்றை எதிர்நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில், இன்று மான்செஸ்டர் யுனைடெட் அணியானது, வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை எதிர்த்து போட்டியிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும், ஒரு கோலுக்காக பல முறை முயற்சித்த போதும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், ஆட்டத்தின் முதல் பாதியானது கோலின்றி முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியின், 54வது நிமிடத்திலேயே வெஸ்ட் ஹாம் அணியின் சைட் பென்ரஹ்மா கோல் ஒன்றை அடித்தார்.

16 ஓவரில் 40-தே ரன், ஆனா ஒரு விக்கெட் கூட அஸ்வின் எடுக்கல…, என்ன தான் காரணம்??

இதனை தொடர்ந்து, வெஸ்ட் ஹாம் அணி வீரர் செம் சைட் கோல் அடிக்க, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. இதன் பின், ஆட்டத்தின் கடைசி நேரமான 90 மற்றும் 90+5 ஆகிய நிமிடங்களில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் இரு கோல்கள் அடித்து அசத்தினார். இதனால், 3-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியானது வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி பார்முக்கு திரும்பியதுடன் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here