ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்களின் வசதிக்கு ஏற்ப கூடுதல் ரயில் சேவைகளை வழங்க ரயில்வே நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
‘மார்க் ஆண்டனி’ பட வெற்றிக்கு நடிகர் விஜய் காரணமா? தயாரிப்பாளர் வினோத் நெகிழ்ச்சி பதிவு!!
அந்த வகையில், வாரம் இருமுறை இயக்கப்படும் நாகர்கோவில் – வேளாங்கண்ணி ரயிலில் குளிரூட்டப்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு நாகர்கோவில் – வேளாங்கண்ணி ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.