
நாடு முழுவதும் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் தொலைதூர பயணங்களுக்கு ரயில் சேவையையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் தான் என்னவோ? பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பல முக்கிய வழித்தடங்களுக்கான முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களிலே தீர்ந்து விடுகிறது. இருந்தாலும் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பலரும் வெயிட்டிங் லிஸ்ட்டில் மட்டுமே இடம் பெறுகின்றனர்.
இந்த சூழலில் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப ரயில் துறையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த 2027 ஆம் ஆண்டுக்குள் தினசரி இயங்கும் ரயில்களோடு கூடுதலாக 3,000 ரயில் இயக்க இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.