ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை., 14 லட்சம் பேர் பயன் பெற நடவடிக்கை., வெளியான முக்கிய அறிவிப்பு!! 

0
பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகமாக கருதப்படும் ஆதிதிராவிடர் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு  நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்டவைகளில் முழு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் வருடம் தோறும்  உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது  ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, அனைத்து கல்வி உதவி திட்டத்தை இணைத்து அதன் மூலம் 14 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் தனியாக கல்வி இணையதளம் ஒன்றை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here