ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் – குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி!!

0

மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 15  நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு :

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் தனக்கு கீழே உள்ள ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர் மட்டுமல்லாமல், அவருக்கு உடந்தையாக இருந்த 4 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து இவர் கடந்த டிசம்பர் 7ல் தலைமறைவானார்.

பல நாட்களாக தேடப்பட்டு வந்த அவர், நேற்று கர்நாடக மாநிலம் ஹாசனில் வைத்து தனிப்படை போலீசாரால்  கைது செய்யப்பட்டார். நேற்று இரவு முழுவதும் டிஐஜி, எஸ்.பி.  தலைமையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து, இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here