Saturday, April 20, 2024

“குளு குளு” மழைக்கு சூடான ஸ்னாக்ஸ் ரெஸிபி இதோ..!!

Must Read

பருவமழை காலம் ஆரம்பித்து விட்ட இந்த காலத்தில், எதாவது சூடாக சாப்பிட நன்றாக இருக்கும் என்று தோன்றும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் அருமையான ஸ்னாக் ரெஸிபி இது..

தேவையான பொருட்கள்:
  • ரவை – 1/2 கப்
  • தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – 1/4 டேபிள் ஸ்பூன்
  • பேக்கிங் சோடா – 2 பின்ச்
  • கேரட் – 1 சிறியது
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • குடைமிளகாய் – 1 சிறியது
  • மிளகாய்  – 1
  • இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
  • ஆயில் – தேவையான அளவு
  • பிஸ்சா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்

ரெஸிபி செய்யும் முறை:

 

  • நான் மேல சொன்ன பொருள்கள் எல்லாத்தையும் ரெடியா எடுத்து வச்சுக்கோங்க ..
  • இப்போ ரவைய மட்டும் மிக்ஸில போட்டு மாவு மாதிரி அரைச்சுக்கோங்க அத ஒரு பாத்திரத்துக்கு மாத்திட்டு அதுகூட தயிர், உப்பு, பேக்கிங் சோடா கலந்து நல்லா மிருதுவா பிசஞ்சுருங்க தண்ணி , ஆயில் எதுவும் சேர்க்க வேண்டாம்.
  • அத அப்டியே ஒரு மூடி போட்டு மூடிருங்க இப்ப கேரட், குடைமிளகாய், மிளகாய் எல்லாத்தையும் பொடியா நறுக்கிக்கோங்க அதுகூட இஞ்சியையும் அரைச்சுக்கோங்க.
  • இப்ப இன்னொரு பாத்திரத்துல நறுக்கி வச்ச கேரட், குடைமிளகாய், மிளகாய் ,  இஞ்சி , உப்பு , மிளகு எல்லாத்தையும் ஒண்ணா கலந்து வச்சுக்கோங்க.
  • இப்ப நாம ரெடி பண்ண மாவ 2 டேபிள் ஸ்பூன் ஆயில் சேர்த்து நல்ல பிசைஞ்சுவிட்ருங்க ..அத சப்பாத்தி மாவு மாதிரி மெல்லிசா தேச்சு அதுல பிஸ்சா சாஸ தடவி அதுக்கு மேல நம்ம கலந்து வச்ச வெஜிடபிள்ஸ்ஸ சேர்த்துக்கோங்க..
  • இப்ப அத நல்ல ரோல் மாதிரி உருட்டி ஒரு பாத்திரத்துல ஆயில் அப்ளை பண்ணி இட்லி பாத்திரத்துல 15 நிமிஷம் வேக வச்சுக்கோங்க..
  • இப்ப அத எடுத்து சின்ன சின்ன துண்டுகளை வெட்டி ஒரு தட்டுல வச்சு அதுக்குமேல 1 டேபிள் ஸ்பூன் அளவு கடுக தாளிச்சு தூவிடுங்க ..
  • சுட சுட ஈவினிங் ஸ்னாக் ரெடி
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -