Saturday, April 20, 2024

7 வருடங்களுக்கு பிறகு, இந்தியா ஐரோப்பிய யூனியன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் – காணொளி மூலம் பேச்சுவார்த்தை..!!

Must Read

இந்தியா மற்றும் 27 உறுப்பினர்கள் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் வருடாந்திர மாநாடு, இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு நடந்தது. ஐரோப்பியா இந்தியாவிற்கான முக்கிய பெரும் வர்த்தக பங்குதாரர் என்பதால் சீரான வர்த்தகத்திற்கும் முதலிடுக்கும் இந்த மாநாடு ,இம்முறை கொரோனா நோய் தொற்று காரணமாக காணொளி மூலம் நடைபெற்றது.

வர்த்தக ஒப்பந்தம்:

இதில் 2007 ஆம் வருடம் ஆரம்பிக்கபட்டு பின்பு 2013 நிறுத்தப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சு மீண்டும் இந்த ஆண்டு துவங்கி உள்ளது. தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மிகவும் எளிமைபடுத்தி தரும். இது தொடர்பாக உயர்நிலை வர்த்தக பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

India-EU attempts to re-start free trade talks
India-EU attempts to re-start free trade talks

இதில் இந்திய சார்பாக பிரதமர் நரேந்திர மோடியும் ஐரோப்பிய நாடுகள் சார்பாக ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் சார்லஸ் மைக்கேல் -ம் ஐரோப்பிய செயல் துறை தலைவர் உர்சலா வோன் டெர்லேயன்யும் கலந்து கொண்டனர்.

India-EU summit video conference
India-EU summit video conference
நல்ல ஆரம்பம்:

இந்த ஒப்பந்தம் நிறைவேற வெகு தூரம் இருப்பினும் இது ஒரு நல்ல ஆரம்ப உரையாடல் என தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இலக்கை அடைய பெரிதும் துணைபுரியும் என கூறியுள்ளனர்.

India, European Union
India, European Union

மேலும் இரு நாடுகளின் தகவல் மற்றும் தனியுரிமையை பாதுகாக்க இரு நாடுகளும் இணைத்து செயல்படும் எனவும் செய்தி வெளியாகி உள்ளது. இதனுடன் 5G கற்றலை மற்றும் AI தொழில் நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளில் இணைந்து செயல்பட ஆர்வம் உள்ளதாக தெரிவிக்க பட்டது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: சென்னை சொதப்பல் ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடத்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் லக்னோ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -