யூரோ கால்பந்து திருவிழா – இன்று முதல் ஆரம்பமாகிறது; ரோம் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இத்தாலி – துருக்கி மோதல்!!!

0

உலகில் அதிகம் பேரால் பார்க்கப்படும் விளையாட்டுகளில் 2வது இடம் எப்போதும் யூரோ கால்பந்து தொடருக்குதான். 1960ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தத் தொடர் இன்று முதல் ஆரம்பம்.

யூரோ கால்பந்து திருவிழா:

ரோப்பிய ஒன்றியங்களில் உள்ள நாடுகளை ஒருங்கிணைத்து ஒரு கால்பந்து தொடரை நடத்த வேண்டும் என்று விரும்பினார் 1927-ல் பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த ஹென்ரி டிலாவ்னி (henri delaunay). அவரது ஆசை 1958ல் தான் நிறைவேறியது ஆனால் அதற்குள் அவர் காலமாகிவிட்டார். அதனால் அவரது பெயரிலேயே கோப்பையை வழங்க முடிவு செய்யப்பட்டது. முதல் ஐரோப்பிய கால்பந்து தொடர் 1960ஆம் ஆண்டு நடைபெற்றது.

யூரோ கால்பந்து தொடரின் வரலாற்றில் முதன்முறையாக இம்முறை ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த 11 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிஇங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெம்பிலி மைதானத்தில் நடைபெறுகிறது. தொடரில் கலந்து கொண்டுள்ள 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஹங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஸ்டேடியோ ஒலிம்பிக்கோ மைதானத்தில் முதல் போட்டி அரங்கேறுகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இத்தாலி அணியும், துருக்கி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று நள்ளிரவில் 12.30 மணியளவில் ஆரம்பமாக இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here