
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை திருமணத்திற்கான எபிசோடு தான் இப்போ ட்ரெண்டிங்கில் உள்ளது. இவர் கரிகாலன் அல்லது அருண் இதில் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஒரு பக்கம் ஆதிரைக்கு ஆதரவாக ஜனனி அவரது காதலை சேர்த்து வைக்கப் போராடுகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்னொரு பக்கம் குணசேகரன் தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக ஆதிரைக்கு பிடிக்காத கல்யாணத்தை நடத்த பலத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த சூழலில் தற்போது வெளியாகிய ப்ரோமோவில் ஜனனி நந்தினியிடம் நான் கீழே போறேன் என்று சொல்ல, அதுக்கு நந்தினி போய் அவங்க கிட்ட தேவையில்லாமல் திட்டு வாங்க வேண்டாம் என்று சொல்கிறார்.
IPL 2023: கோடியில் புரளும் பரிசு தொகை…, சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு எவ்வளவு தெரியுமா??
இதுக்கு ஜனனி எனக்கு யார் என்ன சொன்னாலும் கவலையில்லை என்கிறார். அடுத்ததாக குணசேகரன் சக்தி இருக்கும் போது இந்த கல்யாணத்தை யார் நிறுத்த நினைச்சாலும் அவங்கள சும்மா விடமாட்டேன் என எச்சரிக்க, இதுக்கு சக்தி யார மிரட்டுறீங்க. எதுனாலும் நேரா பேசுங்க என்று சொல்ல ப்ரோமோ முடிவடைகிறது. மேலும் இனி வரும் எபிசோடில் ஜனனியை விட சக்தி தான் குணசேகரனுக்கு ஆப்பு வைப்பார் என்று தெரிகிறது.