
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து இறப்புக்குப் பின் டி ஆர் பில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதை சரிகட்ட டைரக்டர் பல புது புது சுவாரசியங்களை சீரியலில் கொண்டு வருகிறார். அதன்படி இப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் திருவிழாவிற்காக தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இங்கு குணசேகரன் எப்படியாவது அப்பத்தாவையும், ஜீவானந்தத்தையும் தீர்த்து கட்டி விட வேண்டும் என அதற்கான வேலைகளை பார்த்து வருகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இன்னொரு பக்கம் தன் மனைவியை கொண்டது குணசேகரன், கதிர் தான் என்ற விஷயம் தெரிந்து ஜீவானந்தம் இவர்களை பழிவாங்க வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் இந்த சீரியலில் அடுத்த வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அப்பத்தா ஜீவனந்தத்திற்கு ஆதரவாக குணசேகரன், கதிரை சிக்க வைப்பாராம். ஜீவானந்தமும் அதை பயன்படுத்திக் கொண்டு குணசேகரன் கதையை தீர்த்துக்கட்ட நினைப்பாராம். ஆனால் குறி தப்பி விசாலாட்சி உயிர் போய்விடுமாம். இதுதான் கதையின் அடுத்த திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து ஹிட் கொடுக்கும் விக்ரம்.., மளமளவென உயர்ந்த சம்பளம்.., எவ்வளவு தெரியுமா??